தனக்கெதிராக பொலிசாரின் கெடுபிடிகள் வெகுவாக அதிகரித்து வருவதனால் தான் தேர்தலிலிருந்தும் அரசியலிலிருந்தும் ஒதுங்கிக் கொள்ள நினைப்பதாக தெரிவிக்கிறார் பாலித தெவரப்பெரும.
மத்துகம பொலிசார் தொடர்ந்து நெருக்குதல்களை உருவாக்கி வருவதாக தெவரப்பெரும தொடர்ந்தும் பகிரங்கமாக முறையிட்டு வருவதோடு அவரது மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது அலுவலகம், பிரச்சார நடவடிக்கைகள் மற்றும் குடும்பத்தாருக்கும் தொடர்ந்தும் இடையூறு விளைவிப்பதாகவும், இந்நிலையில் தேர்தல் ஆணையாளரோடு கலந்துரையாடி, தான் அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொள்ள நினைப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment