2 மாதங்களின் பின் சமூக மட்டத்தில் கொரோனா தொற்று! - sonakar.com

Post Top Ad

Thursday, 9 July 2020

2 மாதங்களின் பின் சமூக மட்டத்தில் கொரோனா தொற்று!


இலங்கையில் கடற்படை முகாம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியோர் தவிர சமூக மட்டத்தில் கொரோனா தொற்று இல்லாதிருந்த நிலையில் சுமார் 70 நாட்களின் பின் இன்று சமூக மட்டத்திலான வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது. https://www.sonakar.com/2020/07/60.html

கந்தகாடு புனர்வாழ்வு மையத்திலிருந்து வெலிகடை சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டிருந்த நபர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

எனினும், குறித்த மையத்தில் பணிபுரியும் 57 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது.  இந்நிலையில் மீண்டும் தனிமைப்படுத்தல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றமையும் தற்சமயம் அண்டை நாடான இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதோடு இந்தியாவே தற்போது உலகில் அதிகமாக கொரோனா வைரசால் பாதிப்புக்குள்ளான மூன்றாவது நாடாக உயர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment