2020 ஹஜ் முற்பணத்தை மீளளிப்பதற்கு (refund) நடவடிக்கை - sonakar.com

Post Top Ad

Thursday, 9 July 2020

2020 ஹஜ் முற்பணத்தை மீளளிப்பதற்கு (refund) நடவடிக்கை

zmBnsHk

2020ம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான சூழ்நிலையில்லாத நிலையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு செலுத்தப்பட்ட மீளளிக்கக்கூடிய முற்பணம் 25,000 ரூபாவை மீளப் பெற விரும்புவோர் அதற்கு விண்ணப்பிக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தவிரவும், அடுத்த வருட ஹஜ் பயணத்திற்கான வைப்பாக அதனைத் தொடர விரும்புகிறவர்கள் இம்மாதம் 31ம் திகதிக்கு முன்பாக அதனை எழுத்து மூலம் அறியத்தரும்படியும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இவ்வருடம் செலுத்திய பணத்தை மீளப் பெற விரும்புவோர், அதற்கான பற்றுச்சீட்டின் மூலப்பிரதியுடன் வங்கிக் கணக்குப் புத்தக பிரதி, தேசிய அடையாள அட்டை பிரதி போன்றவற்றுடன் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி மற்றும் தொடர்பிலக்கம்:

180, T.B. Jayah Mawatha,
Colombo 10.
+94 112 669 997
+94 112 667 909

No comments:

Post a Comment