ஏறாவூர்: இளம் பெண் மர்ம மரணம்; கணவன் கைது - sonakar.com

Post Top Ad

Thursday, 4 June 2020

ஏறாவூர்: இளம் பெண் மர்ம மரணம்; கணவன் கைது


ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஐயன்கேணி பகுதியில் திருமணம் முடித்து ஒன்பது நாளான இளம் மனைவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவமொன்று நேற்று (3) இடம்பெற்றுள்ளது.

இன்று மாலை வேளையில் பெண்ணின் உறவுக்கார பெண்மணியொருவர் இப்பெண்ணை சந்திக்க சென்றபோது குறித்த பெண் கட்டிலில் உணர்வற்று கிடப்பதைக் கண்டு அவரை ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போது, வைத்தியர் மூலம் இப் பெண் மரணமடைந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மரணமடைந்த பெண்ணின் கழுத்துப் பகுதியில் பல இடங்களில் நகக்கீறுகள் மற்றும் சங்கிலி இறுக்கியது போன்று அடையாளம் காணப்பட்டதால் இது கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மரணமடைந்த பெண் ஷியாமியா வயது (24) என்பவராவார். குறித்த மர்ம மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கணவன் ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்ணின் உடல் பிரேதப்பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a Comment