மகேந்திரன் கைது முயற்சியை அரசிலிருந்தவர்களே தடுத்தார்கள்: மைத்ரி - sonakar.com

Post Top Ad

Thursday 4 June 2020

மகேந்திரன் கைது முயற்சியை அரசிலிருந்தவர்களே தடுத்தார்கள்: மைத்ரி


தமது ஆட்சிக்காலத்தின் போது மத்திய வங்கி பிணை முறி ஊழலின் பின்னணியில் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனை கைது செய்ய இன்டர்போலின் உதவி நாடப்பட்டிருந்ததாகவும் எனினும் அதனை அரசில் இருந்தவர்களே தடுத்ததாகவும் தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

அரசில் இருந்தவர்களே இது ஊழல் பிரச்சினையில்லை, அரசியல் பிரச்சினை எனவும் இன்டர்போல் இதில் தலையிட வேண்டாம் எனவும் அந்நிறுவனத்துக்கு அறிவித்திருந்ததாக மைத்ரி விளக்கமளித்துள்ளார்.

அதன் பின்னரும் தாம் தீவிர முயற்சியெடுத்தே இன்டர்போல் சிவப்பு நோட்டிஸ் வெளியிட வைத்ததாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment