பிரபல மார்க்கப் பிரச்சாரகரும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் முக்கியஸ்தருமான அஷ்-ஷெய்க் யூசுப் முப்தியின் தந்தையும் மூத்த உலவுமாவுமான ஹனீபா ஆலிம் இன்று காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார், யூசுப் முப்தி, அஷ்ஷெய்க் லபீர், அஷ்ஷெய்க் இன்ஷாப் மற்றும் அல்ஹாஜ் இன்ஹாம் ஆகியோரின் அன்புத் தந்தையும் தஸ்கர ஹக்கானியா அரபுக் கல்லூரியின் நிறுவனருமாவார்.
இன்றிரவு எலமல்தெனியவில் ஜனாஸா நல்லடக்கம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்னாரின் நற்காரியங்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக!
No comments:
Post a Comment