கஞ்சிபானை இ. தந்தை கொலை முயற்சி: மூவருக்கு விளக்கமறியல் - sonakar.com

Post Top Ad

Saturday 20 June 2020

கஞ்சிபானை இ. தந்தை கொலை முயற்சி: மூவருக்கு விளக்கமறியல்

https://www.photojoiner.net/image/dsZL50Gj

கஞ்சிபானை இம்ரான் என அறியப்படும் பாதாள உலக நபரின் தந்தை மீதான கொலை முயற்சியின் பின்னணியில் கைது செய்யப்பட்டோரில் மூவருக்கு ஜுலை 2ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.

19 வயது நபர் உட்பட ஐவர் இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் ஏனைய இருவரையும் தடுத்து வைத்து விசாரித்து வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

65 வயதான முதியவரை மாளிகாவத்தை பகுதியில் வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்ய முயற்சி செய்திருந்ததன் பின்னணியில் கஞ்சிபானை இம்ரானுடனான தனிப்பட்ட குரோதம் எனவும் பொலிசார் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment