ஒரே இரவில் 3000 இராணுவத்தினரைக் கொன்றதாகக் கூறும் கருணா அம்மான், பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நியமனம் வழங்க மஹிந்த ராஜபக்ச தயாரானதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தேசியப் பட்டியலுக்கு இராணுவத்தினரைக் கொலை செய்வது தகுதியா? என கேள்வியெழுப்பியுள்ளார் சஜித் பிரேமதாச.
ஆனையிறவில் 3000 இராணுவத்தினரைக் கொன்றதாகக் கூறிய கருணா அம்மான், கிளிநொச்சியில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கையை இன்னும் வெளியிடவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment