கருணா அம்மானை கைது செய்யக் கோரி அடிப்படை உரிமை வழக்கு! - sonakar.com

Post Top Ad

Thursday 25 June 2020

கருணா அம்மானை கைது செய்யக் கோரி அடிப்படை உரிமை வழக்கு!

ekChQ3r

ஒரே இரவில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை ஆனையிறவில் கொன்றொழித்ததாக பெருமை பேசிய முன்னாள் விடுதலைப் புலிகளின் இராணுவ தளபதி விநாயகமூர்த்தி முரளிதரனை கைது செய்யுமாறு கோரி அடிப்படை உரிமை வழக்கொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடுவெல நகர சபை உறுப்பினர் பொசத் கலஹபதிரனவே இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்துள்ளதுடன் நாட்டின் பயங்கரவாத தடுப்பு மற்றும் ICCPR சட்டங்களின் படி கருணா அம்மான் குற்றமிழைத்துள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தான் உலகறிந்த விடயத்தையே கூறியதாகவும் தன்னைக் கைது செய்ய முடியாது எனவும் கருணா தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment