அஷ்ஷைக் ஏ.ஸி.எம். இக்பால் (அல் பாஸி): ACJU அனுதாபம் - sonakar.com

Post Top Ad

Tuesday 23 June 2020

அஷ்ஷைக் ஏ.ஸி.எம். இக்பால் (அல் பாஸி): ACJU அனுதாபம்

MamXVfg

அஷ்ஷைக் ஏ.ஸி.எம். இக்பால் (அல் பாஸி) அவர்களின் மரணச் செய்தி எம்மைக் கவலையில் ஆழ்த்துகின்றது. ஜம்இய்யாவின் வளர்ச்சியில் இறுதி வரை பங்காற்றிய ஏ.ஸி.எம். இக்பால் (அல் பாஸி) அவர்கள் இன்று (23.06.2020) வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகாலை மாவட்டக் கிளையின் முன்னாள் செயலாளராகவும், தற்போதைய பொருளாளராகவும் மேலும் மத்தியக் குழுவின் உறுப்பினராகவும் நீண்ட காலம் இருந்து ஜம்இய்யாவின் வளர்ச்சிக்காக உழைத்தார்கள். அன்னாரின் குடும்பத்தினருக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, சகல பிழைகளையும் பொறுத்து, நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக, அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதலையும் நற்கூலியையும் வழங்குவானாக, ஆமீன்.
வஸ்ஸலாம்.


அஷ்-ஷைக் எம்.எம்.எம் முர்ஷித்
உப செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments:

Post a Comment