சுகமடைந்ததும் தான் வாக்குமூலம்: கருணா அம்மான்! - sonakar.com

Post Top Ad

Tuesday 23 June 2020

சுகமடைந்ததும் தான் வாக்குமூலம்: கருணா அம்மான்!


தற்போது சுகயீனமுற்றுள்ள நிலையில் தன்னால் வாக்குமூலம் எதுவும் தர முடியாது என சி.ஐ.டியினருக்கு பதிலளித்துள்ளார் முன்னாள் விடுதலைப் புலிகளின் இராணுவத் தளபதி கருணா அம்மான்.

ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை ஒரே இரவில் கொன்றொழித்ததாக அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த கருணாவுக்கு எதிராக தென்னிலங்கையில் எதிர்ப்புக் குரல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. எனினும், ஆளுங்கட்சி அதனை பொருட்படுத்தாத சூழ்நிலையில் பொலிசார் அவரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற முயன்றுள்ளனர்.

இந்நிலையில், தான்  தற்போது சுகயீனமுற்றிருப்பதாகவும் சுகமடைந்த பின்னர் வாக்குமூலம் தருவதாகவும் சட்டத்தரணி ஊடாக விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment