தீர்ப்பு வந்த பின்னரே தேர்தலுக்கான தேதி! - sonakar.com

Post Top Ad

Saturday, 23 May 2020

தீர்ப்பு வந்த பின்னரே தேர்தலுக்கான தேதி!


தற்போது உச்ச நீதிமன்றில் இடம்பெற்று வரும் தேர்தல் அறிவிப்புக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு வெளியிடப்பட்ட பின்னரே தேர்தலுக்கான புதிய தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜுன் 20ம் திகதி தேர்தலை நடாத்துவதற்கு எதிராக வழக்காடப்பட்டு வரும் நிலையில், பெரும்பாலும் தீர்ப்பிலிருந்து 70 நாட்களுக்குள் தேர்தலை நடாத்துவதற்கான ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக விளக்கமளிக்கப்படுகிறது.

எனினும், சுகாதா அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தே முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றமையும் ஏலவே சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜாசிங்கவின் கடிதத்தின் அடிப்படையிலேயே ஜுன் 20 தேர்தலை நடாத்த முடிவெடுத்ததாக நேற்றைய தினம் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment