துப்பாக்கி சூட்டை 'பார்த்துக்' கொண்டிருந்த பொலிசார் பணி நீக்கம் - sonakar.com

Post Top Ad

Saturday, 30 May 2020

துப்பாக்கி சூட்டை 'பார்த்துக்' கொண்டிருந்த பொலிசார் பணி நீக்கம்

https://www.photojoiner.net/image/9ApvVdp1

மொரட்டுவ பகுதியில் ஹோட்டல் ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்ட வேளையில் அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மூன்று பொலிசார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஹோட்டல் உரிமையாளரிடம் கப்பம் கோரியிருந்த பாதாள உலக கோஷ்டி, ஏலவே ஹோட்டலைத் தாக்கியிருந்த நிலையில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

எனினும், அதையும் மீறி ஹோட்டல் உரிமையாளரை தொலைபேசியில் மிரட்டியிருந்த நபர்கள் அங்கு வாகனம் ஒன்றில் வந்து பொலிசார் முன்னிலையிலேயே துப்பாக்கி பிரயோகம் செய்திருந்த சிசிடிவி நேற்று வெளியாகியிருந்தது. இந்நிலையிலேயே குறித்த நபர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment