மருதானை ஜனாஸா: தற்போதைய நிலவரம் (10.45 am) - sonakar.com

Post Top Ad

Thursday, 2 April 2020

மருதானை ஜனாஸா: தற்போதைய நிலவரம் (10.45 am)


கொரோனா வைரசினால் நேற்றைய தினம் உயிரிழந்த மருதானையைச் சேர்ந்த 73 வயது சகோதரர் பிஸ்ருல் ஹாபிஸ் யூனுஸின் ஜனாஸாவை அடக்குவதற்கான அனுமதியைப் பெறும் முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. எனினும், சுகாதார அதிகாரியை சோனகர்.கொம் தொடர்பு கொண்ட போது அவர் தெரிவித்த கருத்துக்களுக்கு அமைய  இது தொடர்பிலான சாதகமான முடிவொன்று இதுவரை வழங்கப்படவில்லை.  (இலங்கை நேரம் காலை 10.40)இந்நிலையில், குடும்பத்தவர்களில் குறைந்த எண்ணிக்கையானோருக்கு பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ள அதேவேளை குறித்த சகோதரர் குடியிருந்த பகுதி தற்போது படையினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் ஒன்று கூடி தீவிரமான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ள அதேவேளை அரச உயர் மட்டத்தின் தலையீடு வேண்டி அதற்கான முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன. 

ஜாவத்தையில் அடக்குவதற்கான நம்பிக்கையுடன் குடும்பத்தார் போக்குவரத்துக்கான வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்யவும் முயற்சி செய்து வருகின்ற நிலையில் சமூக வலைத்தளங்களில் இது குறித்து பல்வேறு ஊகங்கள் பரிமாறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜனாஸாவை அடக்குவதற்கான அனுமதி வேண்டி பிரார்த்தனையில் ஈடுபடுவோம்!


No comments:

Post a comment