ஜாஎல பகுதியிலிருந்து மேலும் ஒருவர் முகாமுக்கு - sonakar.com

Post Top Ad

Tuesday, 21 April 2020

ஜாஎல பகுதியிலிருந்து மேலும் ஒருவர் முகாமுக்குஜாஎல பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த நபரோடு நெருக்கமாக பழகி வந்த ஒருவரை பல நாள் முயற்சியின் பின் தேடிக் கண்டு பிடித்து முகாமுக்கு அனுப்பி வைத்துள்ளனர் கடற்படையினர்.குறித்த நபர் ஏலவே தொற்றுக்குள்ளான ஒருவரோடு தொடர்பிலிருந்தவர் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் வாகன சாரதியொருவருக்கு தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் 28 பேருக்கு தனிமையில் இருக்க உத்தரவிடப்பட்டிருந்தது. எனினும் அவர்கள் அலட்சியமாக உலவித்திரிந்த நிலையில் கைது செய்யப்பட்டு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததோடு, இவர்களின் தொடர்பில் கிரான்ட்பாஸ் நாகலகம வீதியிலுமாக நூற்றுக்கணக்கானோர் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment