புதுக்கடை: 242 குடும்பங்களை முகாமுக்கு அனுப்ப நடவடிக்கை - sonakar.com

Post Top Ad

Tuesday, 21 April 2020

புதுக்கடை: 242 குடும்பங்களை முகாமுக்கு அனுப்ப நடவடிக்கை


கொழும்பு 12, புதுக்கடை, பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் வசித்து வந்த பெண்ணொருவரு தம்பதிவ யாத்திரைக்கு சென்று திரும்பி, பரிசோதனையின்றி நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டு ஒரு மாதத்தின் பின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்தார்.அவர் வாழ்ந்த தோட்டப் பகுதியைச் சேர்ந்த 58 பேர் இதுவரை வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் இப்பகுதியை அண்டி வாழ்ந்த மேலும் 242 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரம் பேரளவில் முகாமுக்கு அனுப்பி தனிமைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையிலும் குறித்த சம்பவத்தின் உண்மைத்தன்மையை மறைத்து, அப்பகுதி முஸ்லிம்கள் வாகனங்களில் அழைத்துச் செல்லப்படுவதை ஒளிபரப்பியே பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment