ரமழானில் பேணுதலுடன் நடந்து கொள்வோம்: சூஃபி கவுன்சில் - sonakar.com

Post Top Ad

Friday 24 April 2020

ரமழானில் பேணுதலுடன் நடந்து கொள்வோம்: சூஃபி கவுன்சில்

https://www.photojoiner.net/image/CWZNHtnn

கொரோனா சூழ்நிலையில் எதிர்கொள்ளும் ரமழானில் மக்கள் பேணுதலுடன் நடந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது இலங்கை சூபி தரீக்காக்களின் உயர் பீடம்.



நோன்பு காலத்தில் கஞ்சி காய்ச்சும் பாரம்பரியம் இருக்கின்ற போதிலும் அதனை பள்ளிவாசல்கள் தவிர்ந்த வேறு ஏதாவது இடத்தில் காய்ச்சி, பிரதேச பொலிஸ், சுகாதார அதிகாரிகளின் உதவியை நாடி விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இப்தார் நிகழ்வுகள் மற்றும் தராவீஹ் தொழுகைகளை சுகாதார அமைச்சின் அறிவுரைக்கேற்ப, பள்ளிவாசல்களில் முற்றாகத் தவிர்த்துக் கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment