என்னால் முகமூடி அணிய முடியாது: ட்ரம்ப் அடம்! - sonakar.com

Post Top Ad

Saturday, 4 April 2020

என்னால் முகமூடி அணிய முடியாது: ட்ரம்ப் அடம்!


கொரோனா வைரசால் மிகத் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுள் ஒன்றாக அமெரிக்கா உருவெடுத்துள்ள நிலையில் அங்குள்ள மக்களை முகமூடி (Face mask) அணிந்தே வெளியில் செல்லுமாறு மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.


எனினும், தன்னால் அதை செய்ய முடியாது என பகிரங்கமாகவே மறுதலித்துள்ளார் அந்நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்.

தனது அழகான வெள்ளை மாளிகைக்குள் வரும் பிற நாட்டுத் தலைவர்க்ள, மன்னர்கள், இராணிகளை முகமூடி அணிந்து கொண்டு வாழ்த்தி வரவேற்பதற்குத் தான் தயாரில்லையென அவர் விளக்கமளித்துள்ளமையும் அமெரிக்காவில் இதுவரை 7000 பேருக்கு அதிகமாக கொரோனாவினால் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment