சம்பளம் பெறவே நாடாளுமன்றை கூட்டச் சொல்கிறார்கள்: மஹிந்தானந்த - sonakar.com

Post Top Ad

Saturday, 4 April 2020

சம்பளம் பெறவே நாடாளுமன்றை கூட்டச் சொல்கிறார்கள்: மஹிந்தானந்த


தமது ஊதியம் மற்றும் சிறப்புச் சலுகைகளை மீண்டும் அனுபவிக்கும் நோக்கிலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றை மீண்டும் கூட்டுமாறு கோருவதாக தெரிவிக்கிறார் மஹிந்தானந்த அளுத்கமகே.


நாடாளுமன்றம் மீண்டும் செயற்பட ஆரம்பித்தால் பாரிய செலவீனங்கள் ஏற்படும் எனவும் தற்போதைய தேவை கொரோனாவிலிருந்து விடுபடுவதற்கான வழியைத் தேடுவதுதான் எனவும் மஹிந்தானந்த மேலும் தெரிவிக்கிறார்.

ஏலவே, அத தெரண நிகழ்ச்சியொன்றின்  விளம்பர இடைவேளையின் போது முஸ்லிம் விரோத கருத்துக்களைக் கலந்துரையாடியதன் பின்னணியில் மஹிந்தானந்த சர்ச்சைகளை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment