இளைஞர்களுக்கும் கொரோனா தீவிரமாக பரவுகிறது: WHO எச்சரிக்கை - sonakar.com

Post Top Ad

Saturday, 4 April 2020

இளைஞர்களுக்கும் கொரோனா தீவிரமாக பரவுகிறது: WHO எச்சரிக்கை

https://www.photojoiner.net/image/w6y5cEEQ

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏலவே உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வயோதிபர்களையே தாக்கி வரும் என்ற நிலைக்கு அப்பால், தற்போது உலகளாவிய ரீதியில் அதிகமாக இளைஞர்களும் தாக்கத்திற்குள்ளாகி வருவதோடு உயிரிழந்தும் வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.வயோதிபர்கள் தீவிரமாக பாதிக்கப்படுகின்ற போதிலும் இளைஞர்களும் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தெற்கு லண்டனில் எதுவித நோய் பாதிப்பும் இல்லாத 13 வயது சிறுவனான இஸ்மாயில் முஹமது அப்துல் வஹாப் கொரோனா பாதிப்புக்குள்ளாகி வபாத்தாகியிருந்ததுடன் அவரது ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment