கதிர்காமம்: முகாமில் இருந்து தப்பியோடிய நபர்; மடக்கிப் பிடித்த பொலிசார் - sonakar.com

Post Top Ad

Thursday, 16 April 2020

கதிர்காமம்: முகாமில் இருந்து தப்பியோடிய நபர்; மடக்கிப் பிடித்த பொலிசார்


கதிர்காமம் பகுதியில் தனிமைப்படுத்தல் நிலையம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் ஊரடங்கு தளர்த்தப்பட்ட வேளை தப்பியோடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.


கொழும்புக்கு பயணிக்கும் நோக்கில் தப்பியோடியிருந்த குறித்த நபரை பொலிசாரும் சுகாதார அதிகாரிகளும் சேர்ந்து பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்து மீண்டும் தனிமைப்படுத்தல் மையத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த நபர் அவிஸ்ஸாவெலயில் குடியிருப்பவர் எனவும் விடுமுறைக்காக அப்பகுதிக்கு வந்த வேளையில் இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment