மக்கள் நலனை விட தேர்தலுக்கு என்ன அவசரம்: அசாத் சாலி கேள்வி! - sonakar.com

Post Top Ad

Thursday 16 April 2020

மக்கள் நலனை விட தேர்தலுக்கு என்ன அவசரம்: அசாத் சாலி கேள்வி!


உலகமே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் தேர்தல் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் முன்னாள் மேல் மாகாண ஆளுநருமான அசாத் சாலி.



கொரோனா அபாயம், மக்களுக்கான நிவாரணம், பட்டினி என அடிப்படை விடயங்களையெல்லாம் நிராகரித்து தேர்தலை நடாத்துவதில் குறியாக உள்ள அரசாங்கம், எதிர்க்கட்சியினருக்கு தேர்தலுக்கு முகங்கொடுக்க அச்சம் என பிரச்சாரங்களையும் ஒரு பக்கத்தில் முடுக்கி விட்டுள்ளது.

மக்களுக்கு 5000 ரூபா நிவாரணம் தருவதாகக் கூறி ஏமாற்றி, மக்கள் விரக்தியடைந்துள்ள நிலையில் இனவாதத்தினூடாக முடியாவிட்டாலும் ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தை முன்னிலைப்படுத்தியாவது மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு முயற்சிப்பதால் அரசு தற்போது அதற்கான நிகழ்ச்சி நிரலையும் ஆரம்பித்துள்ளதாக அசாத் சாலி மேலும் விளக்கமளித்துள்ளார்.

சர்வாதிகாரப் போக்கில் அனைத்தையும் அடக்க முயற்சிக்கும் அரசு தேர்தலையும் திணிக்க முயற்சிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment