நீர்கொழும்பு மற்றும் அளுத்கம பெண்களின் ஜனாஸா விபரங்கள் - sonakar.com

Post Top Ad

Friday 3 April 2020

நீர்கொழும்பு மற்றும் அளுத்கம பெண்களின் ஜனாஸா விபரங்கள்


நீர்கொழும்பில் நீண்டகாலமாக வீட்டில் முடங்கியிருந்த பெண்ணொருவர் அவரது வீட்டிலேயே 03ம் திகதி அதிகாலை வபாத்தாகியிருந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஜனாஸாவை மேலதிக பரிசோதனையின் பின்னரே தர முடியும் என வைத்தியசாலை தரப்பு தெரிவித்துள்ள நிலையில் ஜனாஸா நடவடிக்கைகளை மேற்கொள்வது தாமதமாகியுள்ளது.



ஹவ்வா முஹமது பரீத் என அறியப்படும் குறித்த பெண்மணியின் இரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டு, கொரோனா பாதிப்பில்லையென்பதை உறுதி செய்த பின்னரே ஜனாஸாவை கையளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் குடும்பத்தார் காத்திருக்கின்றனர். வார இறுதியென்பதால் இது மேலதிகமாக தாமதித்து விடக்கூடாது என பல தரப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேவேளை, அளுத்கமையைச் சேர்ந்த பாத்திமா ருயிசா செய்னுதீன் மரிக்கார் என அறியப்படும் பெண்மணி நேற்றைய (2) தினம் வீட்டில் விழுந்து உயிரிழந்திருந்த நிலையில் அவரது ஜனாஸா கொரோனா பரிசோதனையின் பின்னர் கையளிக்கப்பட்டுள்ளது. நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த பெண்ணின் பரிசோதனையை துரிதப்படுத்தி அவரது ஜனாஸாவை பெற்றுக் கொள்வதற்கு ராஜித சேனாரத்ன உதவி புரிந்ததாகவும் அவருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் மேல் மாகாண முன்னாள் ஆளுனர் அசாத் சாலி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், பெரும்பாலும் அனைத்து மரணங்களும் கொரோனா பரிசோதனைக்குட்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Suhood MIY said...

இறைவன் எல்லாருக்கும் பொதுவானவன். அதன் உண்மையை அவரவர்களின் இறுதிக்காலத்தில் அவரகளாலேயே அறிந்து கொள்ள முடியும்.

Post a Comment