தகவலை மறைத்து மக்களை ஏமாற்றும் Derana TV! - sonakar.com

Post Top Ad

Saturday, 18 April 2020

தகவலை மறைத்து மக்களை ஏமாற்றும் Derana TV!இலங்கையில் திங்கட் கிழமை 20ம் திகதியுடன் ஊரடங்கு தளர்த்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இம்மாதத்தின் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் விபரம் தொடர்பில் அத தெரண தொலைக்காட்சி இன்றைய தினம் வரைபொன்றை வெளியிட்டு மக்களை ஏமாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது.மார்ச் மாதம் முதல் ஒவ்வொரு ஏழு தினங்களாக கட்டங்களை வரைந்து வந்து ஏப்ரல் மாதம் 15ம் திகதி முதல் 17ம் திகதியை மூன்று தனித்தனி நாட்களாக சிதைத்து இவ்வாறு வரைபொன்றை குறித்த தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

எனினும், இன்றைய தினத்தையும் இணைத்து அதனை ஒரே கட்டத்துக்குள் இணைத்தால் 18ம் திகதி கண்டறியப்பட்ட 10 பேரையும் இணைத்து, மூன்று தினங்களில் கூட்டுத்தொகை 21ஐத் தொடும் என்பது குறிப்பிடத்தக்கது. அரசாங்கம் தேர்தல் அறிவிப்புக்கு முயற்சி செய்து வரும் நிலையில் தெரண இவ்வாறு மக்களைக் குழப்பும் பணியைச் செய்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

-Rizan A.

No comments:

Post a comment