ஓட்டமாவடி: கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் - sonakar.com

Post Top Ad

Saturday, 18 April 2020

ஓட்டமாவடி: கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில்

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட காகிதநகர் 210டீ கிராம சேவை அதிகாரி தாக்கப்பட்டு சனிக்கிழமை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.காகிதநகர் கிராம சேகர் பிரிவிலுள்ள மக்களுக்கு ஏப்ரல் மாத்திற்கான சமுர்த்தி பெறுவதற்கு தகுதியானவர்களுக்கான கொடுப்பணவும் அதனுடன் இணைந்த உலர் உணவுப் பொதிகள் காகிதநகர் கிராம அதிகாரி அலுவலகத்தில் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் காகிதநகர் கிராம அதிகாரி பிரிவில் கிராம சேவை அதிகாரி, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உதவிகளை வழங்கும் சமயத்தில் அவ்விடத்தில் நின்ற நபரால் மக்களை புகைப்படம் எடுப்பதாக கிராம சேவை அதிகாரியான ஏ.எல்.எம்.அஸ்வரிடம் முறையிட்டுள்ளனர். 

இதன் பிரகாரம் வெள்ளிக்கிழமை மாலை கிராம சேவை அதிகாரி காவத்தமுனையைச் சேர்;ந்த நைனா முஹம்மது முஹம்மட் சியாம் என்பவரை புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று கூறிய போது கிராம சேவை அதிகாரியை பிடித்து தள்ளியதால் கிராம சேவை அதிகாரி விழுந்ததுள்ளார். 

அதன்பிற்பாடு சிறு வாக்குவாதம் இடம்பெற்ற பின்னர் கிராம சேவை அதிகாரி வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கிராம அதிகாரியை தாக்கிய நபரை பொலிஸார் தேடிய போதும் இன்று சனிக்கிழமை மாலை வரை தலைமறைவாகியுள்ளார். 

இன்று சனிக்கிழமை உடலில் சற்று வலி அதிகமாக இருந்ததால் கிராம அதிகாரி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், தாக்கிய நபரை கைது செய்யும் நடவடிக்கையில் வாழைச்சேனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். 

காகிதநகர் 210டீ கிராம சேவை அதிகாரியை தாக்கிய காவத்தமுனையைச் சேர்;ந்த நைனா முஹம்மது முஹம்மட் சியாம் என்பவர் காவத்தமுனை பிரதேசத்திற்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதே வேளை கிராம உத்தியோகத்தரை தாக்கியதாக கூறப்படும் சந்தேக நபரை நாளை ஞாயிற்றுக்கிழமையும் கைது செய்யாவிட்டால் மட்டக்களப்பு மாவட்டம் தழுவிய ரீதியில் மாவட்ட கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் கடமை செய்யாமல் எதிர்ப்பினை தெரிவிக்கவுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments:

Post a comment