கொரோனா பாதிப்பில் மேலும் ஒருவர் வபாத்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 1 April 2020

கொரோனா பாதிப்பில் மேலும் ஒருவர் வபாத்!


கொரோனா வைரஸ் பாதிப்பினால் மேலும் ஒரு முஸ்லிம் நபர் உயிரிழந்துள்ளார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.மருதானை, போபஸ் லேனைப் பூர்வீகமாகக் கொண்ட 73 வயதான பிஸ்ருல் ஹாபி யூனுஸ் என அறியப்படும் சகோதரரே இவ்வாறு வபாத்தாகியுள்ளார். ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு சுகயீனம் காரணமாக நேற்றைய தினம் சென்றிருந்த நிலையில் குறித்த நபருக்கு கொரோனா பாதிப்பிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதையடுத்து ஐ.டி.எச்சுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

எனினும், ஐ.டி.எச்சில் அனுமதிப்பதற்கு நான்கு மணி நேர தாமதம் ஏற்பட்டுள்ள அதேவேளை அனுமதிக்கப்பட்டு ஒரு மணி நேரத்தில் அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் சோனகர்.கொம்முக்கு தெரிவித்தனர். இந்நிலையில், தற்போது அமுலில் இருக்கும் சட்டவிதிகளுக்கமைய எரியூட்டலுக்கே இடமிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றமையும் இது இலங்கையில் இடம்பெற்றுள்ள மூன்றாவது கொரோனா மரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment