ஜனாஸா தொடர்பில் அவசரமாக பிரதமரை சந்திக்க முஸ்தீபு - sonakar.com

Post Top Ad

Wednesday, 1 April 2020

ஜனாஸா தொடர்பில் அவசரமாக பிரதமரை சந்திக்க முஸ்தீபு

https://www.photojoiner.net/image/blRzHkj3

கொரோனா வைரஸ் பாதிப்பினால் இரண்டாவது முஸ்லிம் நபர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களது ஜனாஸாவை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய அனுமதிப்பது தொடர்பில் நேரடியாகவே பிரதமரை சந்தித்து உரையாடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சோனகர்.கொம் தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன.


காலை 7 மணியளவில் மஹிந்த ராஜபக்சவை சந்திப்பதற்கு கொழும்பைத் தளமாகக் கொண்ட முஸ்லிம் பிரமுகர்கள் சிலர் தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகின்ற அதேவேளை ஜனாஸாவை எரியூட்டும் நடவடிக்கை காலை 9 மணியளவில் இடம்பெறவுள்ளதாக உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமரின் தலையீட்டை முஸ்லிம் சமூகம் நாடியுள்ளதோடு சஜித் பிரேமதாசவும் இது தொடர்பில் தலையிட்டு பேசுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment