சித்தாண்டியில் கஞ்சா தோட்டம் முற்றுகை - sonakar.com

Post Top Ad

Tuesday, 7 April 2020

சித்தாண்டியில் கஞ்சா தோட்டம் முற்றுகை

https://www.photojoiner.net/image/xPjYSu3i

செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சித்தாண்டி சந்தணமடு காட்டுப் பகுதியில் கஞ்சா தோட்டம் மற்றும் கசிப்பு கொள்கலன் என்பவற்றை வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினரால் இன்று ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினர்.வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து எட்டு இராணுவ புலனாய்வு அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் கஞ்சா தோட்டம் மற்றும் கசிப்பு கொள்கலன் என்பன வௌ;வேறு இடங்களில் கைப்பற்றப்பட்டது.

இதில் சந்தணமடு காட்டுப் பகுதியில் இருந்து பதினாறு கஞ்சா செடிகள் வளர்த்து வந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கசிப்பு தயாரிப்பதற்கு ஆரம்ப நடவடிக்கை மேற்கொண்டு பதுக்கி வைக்கப்பட்ட கசிப்பு 210 லீற்றல் கொள்கலன் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் ஈடுபட்டு வந்த நபர்கள் தப்பி ஓடியுள்ளதுடன், இவர்கள் தொடர்பான விசாரணைகளை இராணுவ புலனாய்வு அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

-எஸ்.எம்.எம்.முர்ஷித்.

No comments:

Post a comment