சர்வாதிகாரத்தை ஆதரித்து நாட்டை நாசமாக்க முடியாது: பொன்சேகா - sonakar.com

Post Top Ad

Saturday, 18 April 2020

சர்வாதிகாரத்தை ஆதரித்து நாட்டை நாசமாக்க முடியாது: பொன்சேகா


ஜனநாயக நாடாக இருப்பதே இலங்கைக்கு பெருமையென தெரிவிக்கின்ற சரத் பொன்சேகா, தமது சுய இலாபங்களுக்காக அடுத்தவரைப் போற்றிப் புகழ்ந்து காலை நக்கி வாழும் கூட்டமே சர்வாதிகாரத்தின் பால் இலங்கையைக் கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார்.தற்போதைய அவசர சூழ்நிலையில் நாடாளுமன்றைக் கூட்டி 225 மக்கள் பிரதிநிதிகளின் அபிப்பிராயத்தையும் உள் வாங்குவதே சிறந்ததெனவும் அதுவே நாட்டுக்கு கௌரவம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும், நாடாளுமன்றைக் கூட்டும் எந்த யோசனையும் இல்லையென பெரமுன தரப்பு திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment