தேர்தல்: மஹிந்த தேசப்பிரியவை மிரட்டும் விஜேதாச - sonakar.com

Post Top Ad

Saturday, 18 April 2020

தேர்தல்: மஹிந்த தேசப்பிரியவை மிரட்டும் விஜேதாச

https://www.photojoiner.net/image/ZHeAYfgE

தேர்தலுக்கான தேதி குறிப்பதை தவிர்த்து வரும் தேர்தல் ஆணைக்குழு தலைவர் அரசியல் சட்டத்தை மீறி வருவதாக தெரிவிக்கிறார் முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச.மஹிந்த தேசப்பிரியவுக்கு 3 பக்க கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள அவர், ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட தேர்தலினை பின் போட்டிருக்கும் நிலையில் அதற்கான மாற்றுத் திகதியொன்றை அறிவிக்காமல் இருப்பது சட்ட விரோதம் எனவும் அதற்குரிய நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய கொரோனா சூழ்நிலையில் தேர்தலை நடாத்தக் கூடாது என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment