மாஸ்க் அணியாது பயணிப்பவர்கள் திருப்பியனுப்பப்படுவர்: பொலிஸ் - sonakar.com

Post Top Ad

Saturday, 11 April 2020

மாஸ்க் அணியாது பயணிப்பவர்கள் திருப்பியனுப்பப்படுவர்: பொலிஸ்


ஊரடங்கு நேரத்தில் பிரயாணிப்பதற்கான அனுமதி வைத்திருப்பவர்கள் கூட இலங்கையில் வீதிகள், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போதும், பொது இடங்களிலும் முக மூடி அணிந்திருத்தல் கட்டாயம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.அவ்வாறு முகமூடி அணியாது பயணிப்பவர்களை வந்த இடத்துக்கே திருப்பியனுப்புமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

எனினும், அமைச்சர்கள் மட்டத்தில் உள்ளவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் சமூக இடைவெளி விதிகள் மீறப்படுகின்றமை பரவலாகக் காணக்கூடியதாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment