தாமரை கோபுரத்தை இன்று மாலை 6.45க்கு ஒளிர விடத் திட்டம்! - sonakar.com

Post Top Ad

Saturday, 11 April 2020

தாமரை கோபுரத்தை இன்று மாலை 6.45க்கு ஒளிர விடத் திட்டம்!


கொரோனா சூழ்நிலையில் தமது உயிரைப் பணயம் வைத்து முன்னிலையில் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரை கௌரவிக்கும் முகமாக இன்று மாலை 6.45 க்கு தாமரைக் கோபுரத்தை ஒளிர வைக்கவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது அரசு.


உலகின் பல நாடுகளிலும் இவ்வாறு சுகாதார ஊழியர்களை கௌரவப்படுத்தும் முகமாக கைதட்டுதல், விளக்கேற்றல் போன்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் தொடர்ச்சியில், இலங்கையில் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாக அவசரமாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன திறந்து வைத்த போதிலும் தாமரைக் கோபுரம் மக்கள் பாவனைக்கு இன்னும் தயாராகவில்லையென கடந்த வருடம் விளக்கமளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment