போலி பிரச்சாரம்: அமீரக இலங்கைத் தூதரகம் விளக்கம்! - sonakar.com

Post Top Ad

Saturday, 11 April 2020

போலி பிரச்சாரம்: அமீரக இலங்கைத் தூதரகம் விளக்கம்!


அமீரகத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கையர் தொடர்பில் அந்நாடு எவ்வித பாரபட்சமும் காட்டாது தரமான மருத்துவ வசதிகளை செய்து தருவதாகவும் சமூக வலைத்தளங்களில் பொய்யான பரப்புரைகள் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது அமீரகத்தின் இலங்கைத் தூதரகம்.


இன்றைய தேதியிட்டு, தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் தொடர்பில் தவறான செய்திகள் பரவி வந்த நிலையில் கொழும்பிலுள்ள அமீரக தூதரகம் கடும் கண்டனம் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் அமீரகத்தில் இயங்கும் இலங்கைத் தூதரகம் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment