கொரோனா: 17 முஸ்லிம் அமைப்புகள் இணைந்து 'கூட்டறிக்கை'! - sonakar.com

Post Top Ad

Saturday, 4 April 2020

கொரோனா: 17 முஸ்லிம் அமைப்புகள் இணைந்து 'கூட்டறிக்கை'!


இலங்கையில் கொரோனா சூழ்நிலையில் முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் குறித்து 17 முஸ்லிம் அமைப்புகள் கூட்டாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

  • ஏலவே அறிவித்ததற்கிணங்க பள்ளிவாசல்களில் ஜும்மா மற்றும் ஐவேளை கூட்டுத் தொழுகைகளை தவிர்த்துக்கொள்ளல்
  • மார்ச் மாதம் 10ம் திகதிக்குப் பின் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் அதனை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்தல்
  • கொவிட்19 அறிகுறிகள் தென்பட்டால் தனியார் வைத்தியசாலைகளுக்குச் செல்லாமல் உடனடியாக அரச வைத்தியசாலைக்குச் செல்லல்
  • ஊரடங்குக்கான அரச சட்டவிதிகளை கட்டாயம் கடைப்பிடித்தல் 
போன்ற அம்சங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, சூபி தரீக்காக்களுக்கான உயர்பீடம், தாவூதி போரா சமூகத்துக்கான அமைப்பு, முஸ்லிம் கவுன்சில், வை.எம்.எம்ஏ உட்பட்ட 17 அமைப்புகள் ஒன்றிணைந்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment