குற்றங்களை ஒப்புக் கொண்ட நியுசிலாந்து பயங்கரவாதி! - sonakar.com

Post Top Ad

Thursday, 26 March 2020

குற்றங்களை ஒப்புக் கொண்ட நியுசிலாந்து பயங்கரவாதி!


நியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் கண்மூடித்தமான துப்பாக்கிப் பிரயோகம் செய்து 51 பேரின் உயிரைப் பறித்திருந்த தீவிரவாதி பிரன்டன் தனது கொலைக் குற்றங்களை நீதிமன்றில் ஒப்புக் கொண்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக, தான் யாரையும் கொலை செய்யவில்லையென வாதாடி வந்த பிரன்டன், தனது பயங்கரவாத செயற்பாட்டை நியாயப்படுத்தி கருத்து வெளியிட்டு வந்ததோடு 27 வருட சிறை வாழ்க்கைக்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்த நிலையில், தற்போது 51 பேரைக் கொலை செய்ததோடு மேலும் 40 பேரைக் கொலை செய்ய முயற்சி செய்தமையையும் ஒப்புக் கொண்டுள்ளான்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் பின்னணியில் நகரங்கள் முடக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நீதிமன்றில் சமூகமளித்திருக்கவில்லை. இதனை சுட்டிக்காட்டிய நீதிபதி குறித்த குடும்பங்கள் இதனை செவியுறாதமை கவலையளிப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment