வாழைச்சேனை துறைமுகத்தில் கிருமி அழிக்கும் திட்டம் - sonakar.com

Post Top Ad

Saturday, 28 March 2020

வாழைச்சேனை துறைமுகத்தில் கிருமி அழிக்கும் திட்டம்

https://www.photojoiner.net/image/I60jePgE

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.அந்தவகையில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி, கோறளைப்பற்று வாழைச்சேனை ஆகிய பிரதேச சபைகளுடன்  விசேட அதிரடிப்படையினர் இணைந்து  வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தினை இன்று சனிக்கிழமை (28) சிரமதானம் செய்து கிருமி அழிக்கும் திட்டத்தை மேற்கொண்டனர்.

குறித்த வேலைத்திட்டம் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சோபா ஜெயரஞ்சித் ஆகியோர்களின் பங்குபற்றுதல்களுடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

-எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a comment