அ'புர சிறைச்சாலை துப்பாக்கிச் சூடு: இருவர் மரணம் - sonakar.com

Post Top Ad

Saturday, 21 March 2020

அ'புர சிறைச்சாலை துப்பாக்கிச் சூடு: இருவர் மரணம்அநுராதபுர சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் கைதிகள் மீது நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை வெளியான தகவலின் அடிப்படையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.சிறைக்கைதி ஒருவருக்கு கொரோனா தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டதன் பின்னணியில் அங்கு ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த கைதிகள் சிலர் தப்பிச் செல்ல முயன்றதாக பொலிஸ் தரப்பு கூறுகிறது.

துப்பாக்கிச் சூட்டினால் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment