வாழைச்சேனையில் 09 பேர்; நாடு முழுவதிலும் 180 பேர் கைது! - sonakar.com

Post Top Ad

Saturday, 21 March 2020

வாழைச்சேனையில் 09 பேர்; நாடு முழுவதிலும் 180 பேர் கைது!


கொரோனா கட்டுப்பாட்டின் பின்னணியில் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை மீறிய 09 பேர் வாழைச்சேனையில் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை நாடளாவிய ரீதியில் 180 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.


பொதுமக்கள் நடமாடுவதை தவிர்த்து கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றும் மீறும் பட்சத்தில் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என்றும் பொலிஸார் ஒலி பெருக்கி மூலம் பல இடங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

எனினும், கேளிக்கை - கடற்கரை விஜயம் என பல இடங்களில் ஊரடங்கு மீறல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments:

Post a Comment