கண்டி மாவட்டத்திலும் கொரோனா தொற்று! - sonakar.com

Post Top Ad

Saturday, 28 March 2020

கண்டி மாவட்டத்திலும் கொரோனா தொற்று!


கண்டி மாவட்டத்தின் முதலாவது கொரோனா தொற்றுக்குள்ளான நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அக்குறணை, தெலும்புகஹவத்த பகுதியில் வசிக்கும் நபர் ஒருவருக்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது இவர் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, கண்டி போதனா வைத்தியசாலை இயக்குனர், வைத்தியர். ரத்னாயக்க அவர்கள் குறிப்பிட்டதாக, வைத்தியசாலை நலன்புரி சங்க அங்கத்தவர் எஸ். எம். ரிஸ்வி தெரிவித்தார்.

மேலும், அக்குரணை, தெலும்புகஹவத்தை பிரதேச மக்கள் அவதானமாக இருக்குமாறும், குறித்த நபருடன் தொடர்பு பட்டு இருந்தவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு ஆளாகுமாறும்,  நோய்க்கான அறிகுறிகள் தென்படும் இடத்து உடனடியாக வைத்தியசாலையை அணுகுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

-Mohamed Naleer

No comments:

Post a Comment