ஓட்டமாவடி வியாபாரிகள் தம்புல்ல செல்ல தற்காலிக தடை - sonakar.com

Post Top Ad

Saturday, 28 March 2020

ஓட்டமாவடி வியாபாரிகள் தம்புல்ல செல்ல தற்காலிக தடை


ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மரக்கறி வியாபாரங்களை மேற்கொள்ளும் வியாபாரிகள் தற்காலிகமாக தம்புள்ளை பகுதிக்கு மரக்கறி கொள்வனவு செய்வதை நிறுத்துமாறு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத் தெரிவித்தார். 


நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இலங்கையில் பல்வேறு மாவட்டங்களில் அரசாங்கத்தினால் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பிற மாவட்டங்களுக்கான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 

அந்தவகையில் தம்புள்ளை பகுதிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து மரக்கறி கொள்வனவு செய்வதற்கு செல்லும் வியாபாரிகளை தற்காலிகமாக செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா தெரிவித்திருந்தார்.

நாட்டில் நிலைமைகள் சீராக வந்ததும் மரக்கறி வியாபாரிகள் தங்களது மரக்கறி கொள்வனவு செய்வதற்கு செல்ல முடியும் என்றும், இதற்கு வியாபாரிகள் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத் மேலும் தெரிவித்தார்.

-எஸ்.எம்.எம்.முர்ஷித் / படம்: எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a comment