மாவத்தகம: ஊரடங்கை மீறி ஹெரோயின் கடத்திய பொலிஸ் அதிகாரி - sonakar.com

Post Top Ad

Saturday 28 March 2020

மாவத்தகம: ஊரடங்கை மீறி ஹெரோயின் கடத்திய பொலிஸ் அதிகாரி



மாவத்தகம பொலிஸாரினால் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள வேளையில் ஹெரொயின் 90 மில்லிகிராமுடன் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களை ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு மாவத்தகம மஜிஸ்திரேட் பதில் நீதவான்  மெகி மாரசிங்க இன்று உத்தரவு பிறப்பித்தார். 


மாவத்தகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிசாந்த ஹெட்டி ஆராச்சிக்கு கிடைத்த தகவலுக்கு இணங்க மாவத்தகம பரந்தன வீதியில் மகுலான விஹாரைக்கு அருகாமையில் மோட்டர் சைக்கிலில் வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒரு சந்தேக நபர் கையில் ஹெரொயின் 90 மில்லி கிராம்  வைத்திருந்தார் எனவும்  மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்தி வந்த சந்தேக நபர் குருநாகல் பொலிஸ் நிலையப் குற்றப் பிரிவிலுள்ள அதிகாரி ஒருவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விரு சந்தேக நபர்களையும்  கைது செய்து பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்திய போது  கைது செய்யப்பட்ட குருநாகல் பொலிஸ் குற்றப் பிரிவு பொலிஸ் அதிகாரி விசாரணை மேற்கொண்ட சமயத்தில் பொலிஸ் அதிகாரியின் கைத்துப்பாக்கியை பறிக்க முற்பட்டதாகவும் அவர் கலவரத்தில் ஈடுபட்டாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹெரொயின் வைத்திருந்த நபர் முன்னரும் கைது செய்யப்பட்டு  ஏழு மாதம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வரு சந்தேக நபர்களுக்கு  எதிராக மோட்டார் சைக்கிலுக்கு அனுமதிப் பத்திரம் இல்லை. தலைக்கவசம் இல்லை. ஊரடங்குச் சட்டத்தை மீறுதல், காப்புறுதிப் பத்திரம் இல்லை   எனப்  எட்டுக் குற்றச் சாட்டுக்கள் முன் வைத்து மாவத்தகம பொலிஸார் மாவத்தகம மஜிஸ்ட்ரேட் நீதி மன்றத்தில் முன் ஆஜர்படுத்திய போது  இவ்விரு சந்தேக நபர்களுக்கும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.   

-இக்பால் அலி


No comments:

Post a Comment