சிறு குற்றங்களுடனான கைதிகளை விடுதலை செய்ய ஆராய்வு - sonakar.com

Post Top Ad

Tuesday, 24 March 2020

சிறு குற்றங்களுடனான கைதிகளை விடுதலை செய்ய ஆராய்வு


சிறு குற்றங்கள், பிணைப் பணம் செலுத்த முடியாத நிலையில் சிறைவாசம் அனுபவிப்போருக்கு விடுதலையளிக்கக் கூடிய வழிமுறைகள் உண்டா என ஆராயப்பட்டு வருகிறது.


சிறைச்சாலைகளிலும் கொரோனா அச்சம் நிலவுகின்ற நிலையில் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் இதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏலவே அநுராதபுர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றத்தில் இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment