தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் பஸ்களில் அனுப்பி வைப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday, 24 March 2020

தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் பஸ்களில் அனுப்பி வைப்பு

https://www.photojoiner.net/image/c6s8Eiyq

கொரோனா தடுப்பு முகாம்களான புனானை மற்றும் கந்தகாடு நிலையங்களில் கடந்த 14 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டு மருத்துவ கண்கானிப்பில் வைக்கப்பட்டிருந்தவர்களுள் எவ்விதமான நோய்த்தொற்றும் இல்லாதவர்களை தங்களின் குடுப்பங்களுடன் இணைக்கும் பணி இன்று (24.03.2020) இடம் பெற்றது.புனானை முகாமில் இருந்து மாத்தறை பகுதிக்கு இரண்டு பஸ்கள் மூலமாக 80 பேரும் கொழும்புக்கு இரண்டு பஸ்கள் மூலமாக 125 பேரும் கண்டிக்கு ஒரு பஸ் மூலமாக 33 பேரும் இன்று காலை 9.50 மணியளவில் பொலிஸ் பாதுகாப்புடன் இரானுவத்தினர் அழைத்து சென்றுல்லனர்.

கந்தக்காடு பகுதியில் இருந்து 108 பேர்கள் இரானுவத்தினரினால் பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல் மூலம் தெரிவிக்கின்றது.

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments:

Post a Comment