மாவத்தகம: பொறுமையுடன் நியாய விலையில் பொருட் கொள்வனவு - sonakar.com

Post Top Ad

Thursday, 26 March 2020

மாவத்தகம: பொறுமையுடன் நியாய விலையில் பொருட் கொள்வனவு

https://www.photojoiner.net/image/CDiIVWSE

ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6.00 மணிக்கு நீக்கப்பட்டதுடன் மாவத்தகம நகரிலும் அதனை அண்மித்துள்ள புறநகர் பகுதிகளில் மக்கள் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறையினர் வழங்கிய ஆலோசனையின் பிரகாரம் அதனைக் கடைப்பிடித்து  தங்கள் அத்தியாவசியப் பொருட்களை கொள்முதல் செய்வதற்காக நகருக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று  பொறுமையாக கொள்முதல் செய்வதைக் காணக் கூடியதாக இருந்தது.

விசேடமாக  முகவுறை,  ஒரு மீட்டர் தூர இடைவெளிகளைக் கவனத்தில் கொண்டு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் மத்திரமல்ல, மருந்தகங்களுக்கு  எதிரிலும் , வங்கிகளின் ஏ. டி. எம். வாசல்களிலும் நீண்ட வரிசை காணப்பட்டது. 

மாவத்தகம பிரதேச பிரதேச சபை நகரங்களுக்கு வரும் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் ஒலிபெருக்கிகள் மூலம் கொரனா வைஸ் பரவலைத் தடுக்கும் வகையிலான அறிவுறுத்தல்கள் சிங்களத்திலும் தமிழ்  மொழியிலும் அடிக்கடி ஒலிப்பரப்பிக் கொண்டிருப்பதைக் காணக் கூடியதாக இருந்தது.

அதேவேளையில் ஒரு முட்டை  பத்து ரூபாவுக்கும் மரக்கறிகள் நியாயமான விலைக்கு  நுகர்வோர்கள் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தன. 

-இக்பால் அலி



No comments:

Post a Comment