50 பேருக்கு கொரோனா பரப்பிய நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - sonakar.com

Post Top Ad

Friday, 27 March 2020

50 பேருக்கு கொரோனா பரப்பிய நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

GdIDGxb

சுமார் 50 பேருக்கு கொரோனா பரப்பியதாக சந்தேகிக்கப்படும் 67 வயது நபர் ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கிறார் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி.கிழக்கைச் சேர்ந்த குறித்த நபர் கடந்த 18ம் திகதி இந்தியாவில் இருந்து நாடு திரும்பியுள்ள அதேவேளை தனியார் வைத்தியசாலையொன்றில் பரிசோதிக்கப்பட்டு, அரச வைத்தியசாலையில் அனுமதி பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

எனினும், அதனைத் தவிர்த்து வெளியில் உலவித்திரிந்த நிலையில் இந்நபர் சுமார் 50 பேருக்கு கொரோனா வரக் காரணமானவர் என தெரிவிக்கப்படுவதோடு, தற்போது ஐ.டி.எச்சில் அனுமதிக்கப்பட்டுள்ளவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் பவித்ரா தெரிவித்துள்ளார்.

ஏலவே இத்தாலியிலிருந்து நாடு திரும்பிய பலர் தனிமைப்படுத்தலைத் தவிர்த்து உலவித்திரிகின்ற நிலையில் நாட்டில் 500 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர்களால் 19000 பேருக்கு பரவக்கூடிய அபாயமிருப்பதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment