ஊரடங்கு மீறல்: 30 பேர் கைது! - sonakar.com

Post Top Ad

Saturday, 21 March 2020

ஊரடங்கு மீறல்: 30 பேர் கைது!


கொரோனா தடுப்பின் பின்னணியில் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு அமுலில் உள்ள போதிலும் கேளிக்கை நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்த நபர்கள் உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.



மக்கள் ஒன்றுகூடலைத் தடுக்கு முகமாகவே இவ்வாறு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று விளக்கமளித்துள்ளது.

எனினும், பல இடங்களில் ஊரடங்கையும் மீறி சைக்கிள் ரேஸ், கேளிக்கை ஒன்று கூடல், கடற்கரைப் பயணம் என ஊரடங்கை மீறும் செயல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment