வாழைச்சேனை: வயோதிபர் சடலமாக மீட்பு - sonakar.com

Post Top Ad

Saturday, 21 March 2020

வாழைச்சேனை: வயோதிபர் சடலமாக மீட்பு


வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் பிறைந்துறைச்சேனை பகுதியில் வயோதிபரின் சடலம் இன்று சனிக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். 


ஓட்டமாவடி-1 பரிகாரியார் வீதியில் வசிக்கும் காசிம் அசனார் (கலீல்) வயது 60 என்ற வயோதிபரே வியாபார நிலையத்திற்கு முன்பாக சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் பிறைந்துறைச்சேனை மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி பகுதியிலுள்ள வியாபார நிலையத்திற்கு முன்பாக சடலம் ஒன்று காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். 

இதனை தொடர்ந்து வாழைச்சேனை பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு குற்றத் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சடலம் மருத்துவ பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments:

Post a Comment