CCTV கமராக்களை கழற்றிய பல்கலை மாணவர்களுக்கு சிறை - sonakar.com

Post Top Ad

Friday, 28 February 2020

CCTV கமராக்களை கழற்றிய பல்கலை மாணவர்களுக்கு சிறை


களனி பல்கலைக்கழகத்தில் புதிதாகப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமாராக்களை கழற்றிய சர்ச்சையின் பின்னணியில் 25 மாணவர்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளதோடு நால்வருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.



மாணவர்களை கண்காணிப்பதற்கே குறித்த கமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாக மாணவர் சங்கம் எதிர்ப்பு வெளியிட்டிருந்த நிலையில் இவ்வாறு கமராக்கற் கழற்றப்பட்டிருந்தன.

இப்பின்னணியில் ஒழுக்காற்று நடவடிக்கையின் பின்னணியில் 25 மாணவர்கள் இரண்டு வருடங்களுக்கு இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன் நால்வருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment