சஜித் கூட்டணி பற்றி UNP இன்று தீர்மானம் - sonakar.com

Post Top Ad

Friday, 28 February 2020

சஜித் கூட்டணி பற்றி UNP இன்று தீர்மானம்


சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பலவேகய கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் முகமாக இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



இன்றைய கூட்டத்தில் முடிவொன்று எட்டப்படும் என்ற நம்பிக்கையில் மார்ச் 2ம் திகதி உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு தேதி குறித்துள்ளது சஜித் அணி.

ரணில் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இக்கூட்டணியில் இணைந்து கொள்ள வேண்டும் என அண்மையில் சஜித் பிரேமதாச பகிரங்க அழைப்பு விடுத்திருந்த நிலையில் இன்றைய செயற்குழு கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment