மரக்கறி விலை: ஜனாதிபதி செயலகத்தில் எதிரொலி - sonakar.com

Post Top Ad

Monday, 24 February 2020

மரக்கறி விலை: ஜனாதிபதி செயலகத்தில் எதிரொலி


வெகுவாக உயர்ந்திருக்கும் மரக்கறி விலையினால் பொதுமக்கள் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக அல்லல் பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய தினம் இது குறித்து ஜனாதிபதி செயலகத்தில் நீண்ட தாமதத்திற்குப் பின் கலந்துரையாடப்பட்டுள்ளது.ஆட்சி மாற்றத்தின் பின் மரக்கறி விலை மற்றும் வாழ்க்கைச் செலவு வெகுவாக உயர்ந்திருப்பதாக மக்கள் விசனம் வெளியிட்டு வருகின்றனர். இது வரை அது குறித்த்து அரசாங்கம் பராமுகமாக இருந்து வந்த போதிலும் தற்போது தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் மரக்கறி விலையைக் கட்டுப்படுத்த திட்டம் ஒன்றை வகுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று அமைச்சு அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment